BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 18 May 2014

மதுரை பாராளுமன்றத் தொகுதியில் முதல் முறையாக வென்ற அ.தி.மு.க.


2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வென்ற அ.தி.மு.க.,  தற்போது மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளது. 1952ம் ஆண்டில் இருந்து மதுரை பாராளுமன்றத் தொகுதியானது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகளின் வசம் இருந்தது.

2009ல் நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அழகிரி வெற்றி பெற்றார். தற்போது,  அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரக் களத்தில் இல்லை. காங்கிரசுடனான கூட்டணியும் முறிந்தது. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 1.99 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை தோற்கடித்தார். இதேபோல், சிவகங்கை தொகுதியில் 37 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media