BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 11 June 2014

ராஜஸ்தான் '108' ஊழல் : கார்த்தி சிதம்பரம் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் !!





கடந்த 2013 ஆம் ஆண்டு ஜிகுட்ஜா ஹெல்த் கேர் என்ற ரவி கிருஷ்ணாவின் நிறுவனத்திற்கு  '108 அவசர ஊர்திகளை '  ராஜஸ்தான் ,பீகார் மற்றும் பஞ்சாபில்  இயக்கும்  டெண்டர் தரப்பட்டது . ஆனால் இதில் 14 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்து உள்ளதாக சுகாதார துறையின் தகவல் தெரிவிக்கிறது. அந்த நிறுவனத்திற்கு இந்த டெண்டரை கொடுத்ததிற்காக காங்கிரஸ் மீது  பா.ஜ.க குற்றம் சுமத்தி உள்ளது .அதுமட்டும் இல்லாமல் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் சச்சின் பைலட்   அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்து உள்ளனர் . நேற்று ராஜஸ்தான் போலீஸ், இவர்கள் மட்டும்மல்லாமல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் , கிருஷ்ணா மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது . இந்த வழக்கு இப்போது சிபி - சிஐடி போலீஸ் கைக்கு மாற்றப்பட்டு உள்ளது . இந்த வழக்கில் மேலும்  வயலார் ரவி மற்றும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறபடுகிறது .


காங்கிரஸ் ஆட்சியை விட்டு சென்று விட்டாலும் ஊழல் குற்றசாட்டுகள் அவர்களை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது . அவர்கள் தேர்தலில் தோற்று காயப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களின் 'அவசர ஊர்தி' ஊழல் வெளிவந்ததை போல ,வரும் காலங்களில் அவர்கள் சாகும் நிலையில் 'அமரர்  ஊர்தி ' ஊழல் என்று ஒன்று வெளிவரலாம் என்று எதிர்பாக்கலாம் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media