BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 11 June 2014

மேலும் 4 அமைச்சரவைக் குழுக்களை நீக்கினார் பிரதமர் மோடி !!!


பிரதமர் மோடி அவர்கள் செவ்வாய்க் கிழமை மாலையில் காங்கிரஸ் ஆட்கியில் அமைக்கப்பட்ட மேலும் 4 அமைச்சரவைக் குழுக்களை நீக்கினார் . விலை நிர்ணயம் செய்யும் குழு , உலக வணிகக் குழு , இந்திய தனிநபர் அடையாள அட்டை ஆணையம் ,இயற்கை பேரழிவு ஆணையம் ஆகிய குழுக்களை நீக்கினார் .

இந்த நடவடிக்கை போடி அரசின் தாரக மந்திரமான "குறைந்தபட்ச அரசாங்கம் , அதிகபட்ச ஆட்சி " என்பதை ஒத்து இருக்கிறது . மேலும் இது காங்கிர்ஸ் பின்பற்றிய அமைச்சரவைக் குழுக்களை நம்பிய ஆட்சியை மாற்றும் வண்ணம் உள்ளது .

கடந்த காங்கிரஸ் நிறைய அமைச்சரவைக் குழுக்கள் இருந்ததால் அவர்களால் ஒரு முடிவை சீக்கிரம் எடுக்க இயலவில்லை . மேலும் அவர்கள் கூட்டணியில் உள்ளவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் . இதனால் தான் நாடளுமன்ற செயல்களை கவனிக்கும் அமைச்சரவைக் குழுவில் 9 நபர்களும் , 3 சிறப்பு  நபர்களும் இருந்தனர் . ஆனால் மோடி அரசில் இதுபோன்ற கூட்டணி பங்கீடு அவசியம் இல்லை என்பதால் அனைத்து அமைச்சரவைக் குழுக்களும் சிறியதாக இருக்கும் . மேலும் அனைத்து முடிவுகளும் பிரதமர் அவர்களே எடுக்கலாம் . மன்மோகன் சிங் போன்று மூத்த தலைவர்களுக்கு விட்டுக் கொடுக்க தேவையில்லை .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media