BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 15 June 2014

தனக்கு கொடுத்த அரசு வீட்டை காலி செய்கிறார் கெஜ்ரிவால் !!!

டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களைப் பிடித்தது . பின்னர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் . முதல்வராக பொறுப்பேற்ற பின் , முதல்வருக்காக ஒதுக்கப்பட்ட அரசு வீட்டில் குடியேறினார் . ஆனால் 49 நாட்களில் பதவியில் இருந்து வில்கினார் . ஆனால் அவருடைய மகள் பிளஸ் 2 படித்து வந்ததால் , அதிலேயே வசித்து வந்தார் .

அந்த வீட்டிற்கு வாடகையாக மாதம் 85 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றூ டில்லி மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது . இந்நிலையில் கெஜ்ரிவாலின் மகள் பிளஸ் 2 முடித்து நுழைவுத் தேர்வை எழுதி உள்ளதால் , கெஜ்ரிவால் இந்த வாரத்தில் வீட்டை காலி செய்து விடுவார் என தெரிகிறது . 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media