BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 24 August 2014

போலிசுக்கு தகவல் கொடுத்ததாக கூறி 16 வயது சிறுமியை அவரின் பெற்றோர்கள் முன் சுட்டுக் கொன்ற என்.டி.எப்.பி கிளர்ச்சியாளர்கள் !!



அசாம் மாநிலம் சிராக் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை போலிசுக்கு தகவல் கொடுத்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் அவரின் பெற்றோர் முன்பு சுட்டுக் கொன்று , அந்த விடியோவை லோக்கல் சேனல்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்.டி.எப்.பி அமைப்பினர் .

அந்த விடியோவில் ஒருவர் , " அந்த சிறுமி போலிசுக்கு தகவல் கொடுப்பவராக செயல்பட்டதால் அவரை சுட்டுக் கொன்றோம் . இது மற்றவருக்கும் ஒரு பாடமாக அமையும் " என்று கூறினார் .

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் . அங்கே இருந்த மக்கள் , போலிசார் விடியோ வந்த பின்னர் தான் இது குறித்து விசாரிக்க வந்தனர் என்றார் . சம்பந்தப்பட்ட போலிசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media