BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 25 September 2014

மொக்கைப் படங்களை ரசிகர்கள் கிண்டல் செய்வது தப்பா? வெங்கட்பிரபுவை கழுவி ஊற்றிய ஃபேஸ்புக் பதிவர்

மொக்கைப் படங்களை ரசிகர்கள் கிண்டல் செய்வது தப்பாம். வரம்பு மீறி கிண்டல் செய்கிறார்களாம்.

ஆண்டாண்டு காலமா சினிமாக்காரங்க அவங்களோட படத்தப்பத்தி மீடியாவுல விடுற பீலாவ விடவா ரசிகர்கள் வரம்பு மீறிட்டாங்க. குப்பை படத்த எடுத்து வச்சிட்டு படம் அப்படி வந்திருக்கு இப்படி வந்திருக்குன்னு ஓவர் சீன் போட்டு மக்களை தியேட்டருக்கு வர வப்பாங்களாம். காசு குடுத்து 3 மணி நேரம் வேஸ்ட் பண்ணி படம் பாத்து ஏமாந்தவன் எதுவும் சொல்லக் கூடாதாம். எந்த ஊர் நியாயங்க இது?
 அண்னன் வெங்கட் பிரபு கொதிச்சி எழுந்து சில கேள்விகள் கேட்டிருக்கார். "நீங்கள் நல்ல ரசிகர்களாக இருந்திருந்திருந்தால், ‘தங்க மீன்கள்’ ஒரு மகத்தான வெற்றிப் படமாகி இருக்குமே?"
நீங்க யாருக்காக படம் எடுக்கறீங்களோ அத அவங்க ஏத்துக்கலன்னா அதுல‌ நிச்சயம் ஏதோ சரியில்லைன்னு தான் அர்த்தம். கமர்சியல் விஷயங்கள் இல்லாத படங்கள் நல்ல படங்கள்னு நீங்க ஒரு அளவுகோள் வச்சிகிட்டா அதுக்கு ரசிகர்கள் பொறுப்பல்ல!

ஐயா, நீங்க கமர்சியல் படமே எடுங்க. கலைப் படம் தான் வேணும்னு நாங்க கேக்கல. எதுவா இருந்தாலும் நல்லா இருந்தா கொண்டாடிகிட்டு தான் இருக்கோம். பொய் சொல்லி மக்களை தியேட்டருக்கு இழுத்தீங்கன்னா ஏமாந்தவன் திட்டத்தான் செய்வான்.

உங்களுக்கு சிறப்பா வர்றத எடுக்கறதும், சில நேரத்துல அது எடுபடாம போறதும் சரிதான். ஆனா நாங்க அப்படி எடுத்து வச்சிருக்கொம் இப்படி எடுத்து வச்சிருக்கோம்னு ஏன் ஓவர் பில்டப் கொடுத்து மக்கள ஏமாத்தறீங்க?
உங்க மனச தொட்டு சொல்லுங்க... எடுத்தவங்களுக்கே குப்பை படம், இது நாலு நாளைக்கு மேல ஓடதுன்னு தெரிஞ்சும் அந்த நாளு நாள்ல கலெக்ஷன் எடுத்துடனும்னுதான ஓவரா பில்டப் கொடுக்குறீங்க? பாக்குறவன் ஏமாந்தா நமக்கென்ன, படம் மோசம்னு ரீச் ஆகறதுகுள்ள வர்ற கலெக்ஷன பாத்துடனும்னுதான பொய் சொல்றீங்க?!
ப்ளாப் ஆன எத்தன படங்களுக்கு '100 நாள்' போஸ்டர் ஒட்டி இருக்கீங்க? "'திருமதி தமிழ்' வெற்றிகரமான 100வது நாள்" அப்டீன்னு போஸ்டர் பாத்து உங்களுக்கே கோவம் வரலன்னு சொல்லுங்க?! எவ்வளவு நாள் தாங்க நாங்களும் பொறுத்துப்போம்?

இதுக்கெல்லாம் ஒரு மபடி மேலே போய், ரிலீஸ் ஆகி, மொக்க படம்னு மக்கள் காறி துப்பிணதுக்கு அப்புறமும் அதுல நடிச்சவங்க, இசைச்சவங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்து படம் சூப்பர்‍னு டிவி ஷோ நடத்தி இன்னும் ஏமாந்தவன் எவனாச்சும் கிடைக்க மாட்டானான்னு தேடுற வேலைதான் இப்போ அதிகம் நடக்குது.
இப்போல்லாம் ஸ்டோரி டிஸ்கஷன்லயே "'ஃபேஸ் புக்ல' கழுவி கழுவி ஊத்துவாங்க, ஒழுங்க யோசிங்க"‍‍ ‍ன்னு பேசிக்கிறாங்களாம். மக்கள் கலாய்க்க ஆரம்பிச்சாத்தான் இவங்க ஓரளவுக்காவது திருந்துவாங்க!

அருள்குமார்
https://www.facebook.com/arul76?fref=ts


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media