BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 6 September 2014

அழிந்து வரும் இயற்கை வேளாண்மை பணம் ஈட்டும் பன்னாட்டு நிறுவனங்கள்

விவசாயி ஏன் சாகிறான்?இன்று விவசாயம் என்பது தன்னிறைவு கொண்ட தொழிலாக இல்லை. முழுக்க முழுக்க அந்நிய சக்திகளின் கையே ஓங்கி இருக்கிறது ! கிராம பொருளாதாரம் அடியோடு அழியும் சூழல் வேகமாக பரவி வருகிறது. .செல்வம் நகரத்தில் இருந்து கிராமத்திற்கு செல்லாமல் கிராங்களில் இருக்கும் ஏழை விவசாயிகளிடம் இருந்து பெரும் பணம் படைத்த
நகர்த்தாருக்கே செல்கிறது ! ட்ராக்டர். இன்று விவசாயிகளின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக புகுதப்பட்டுவிட்டது. விசாயத்தை வளர்ச்சி பாதைக்கு இட்டு இது மிகப்பெரிய அளவில் உதவும் என்று நவீன விஞ்ஞானிகளால் பெரிதும் போற்றப்பட்ட போற்றப்படும்

இயந்திரம். ஓர் ட்ராக்டரின் விலை சராசரியாக 5 லட்சம் ரூபாய். இதில் 25 பசு மாடுகளை நாம் வாங்க முடியும் ! முதலில் ட்ராக்டரால் ஏற்படும் பாதிப்புகளை பார்ப்போம். 5 லட்சம் ரூபாய் என்பது இன்றைய விவசாயியை பொறுத்த வரை மிகபெரிய பணம் ! அதையும் மீறி வாங்கினால் அது குடிக்கும்டீசலின் அளவும் அதற்கு ஆகும் பொருட்ச்செலவும் ஒரு விவசாயியை நிச்சயம் நிம்மதி கொள்ள விடாது. . இரும்பு அதிகப்படியான வெப்பத்தை கடத்தும். . வெயிலில் நிலத்தை உழும் போது இந்த அதிகப்படியான வெப்பத்தாலும் நிலம் மலடாகிறது. .ஒரு ட்ராக்டர் 3 டன் எடை கொண்டது. இவ்வளவு பெரிய இயந்திரத்தை விவசாய நிலத்தில் உலவ விடுவதே நிலத்திற்கு செய்யும் மிக பெரிய துரோகம் ! வருங்காலத்தில் 3.5 கோடி ட்ராக்டர்களை இந்திய விவசாயிகளிடம் விற்க பன்னாட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது ! இதன் மூலம் நாம் அறிய வருவது விவசாயி கையில் இருக்க வேண்டிய 12 லட்சம் கோடி பணம் வெளிநாட்டு பண முதலைக்கு சென்று சேரும் ! அரசாங்கமே இதை முழு மூச்சுடன் செய்து முடிக்க ஆயத்தம் ஆகி நிற்கிறது. .விவசாயி வாங்க முடியாவிட்டாலும்  அவனை கடனாளி ஆக்கியாவது இதை முடிவு செய்துவிட்டது ! இயந்திரத்திற்கு இரும்பு, பாக்சைட், நிலக்கரி, மாங்கனீஸ், நிக்கல் , தகரம், செம்பு துத்தநாகம் என பல கனிமங்கள் தேவை படுகிறது. .இதை வெட்டி எடுக் எத்தனை சுரங்கங்கள் தோண்ட பட்டிருக்கும் ? உயிர் சூழல் எவ்வளவு மாசு பட்டிருக்கும் ? எவ்வளவு பெரிய இயற்கை விரோத செயல் இது ? தேவையே இல்லாத ஒரு இயந்திரத்துக்கு இவ்வளவு பாடுபடுவானேன் ? அந்தன் 3.5 கோடி ட்ராக்டர்க்கு போட வேண்டிய டீசலின் அளவையும் அதற்காக நாம் வெளிநாட்டிடம் கையேந்தி நிற்கும் நிலையையும் மக்களின் வரிப்பணம் டாலரில் கொள்ளை போவதையும் யோசித்தால் தலை சுற்றல் ஏற்ப்படும் என்பதால் அதற்குள் நாம் செல்லவேண்டாம். 

மூளையுள்ள ஒவ்வரு மனிதனும் இங்கு ஒரு விஷயத்தை பற்றி யோசித்தே முன்னோர்கள் ( 50 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள்தன் ) எப்படி விவசாயம் செய்திருப்பார்கள் ? எப்படி உணவருந்தி இருப்பார்கள் ? அவர்களும் மனித சுகம் அனைத்தையும் அனுபவித்து தானே சென்றிருக்கிறார்கள் அவர்கள் உபயோகபடுத்தியது உயிருள்ள மாடு, மாடு என்றுமே விவசாயிகளின் நண்பனாக இருந்திருக்கிறது  ! நம் விவசாயத்தை கைபற்ற நினைத்த வெளிநாட்டு கம்பனிகள் முதலில் அழிக்க நினைத்தது மாட்டைத் தான் என்பதும் அதற்காக திட்டம் தீட்டி களத்தில் இறங்கியதும் வியப்பில் ஆழ்த்துகிறது ! பெயரளவில் மட்டுமே நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.இவர்கள் நம்மை இன்னும் பொருளாதாரஅடிமையாகவே வைத்திருக்கிறார்கள் ! ஒரு ட்ராக்டர் வாங்க செலவு செய்யும் பணத்தில் 25 தரமான பசுக்களை நாம் வாங்க முடியும் ! ட்ராக்டருக்கு ஆகும் டீசல் செலவை கணக்கில் எடுக்காமலேயே பசுக்களை பராமரிக்க முடியும் ! பராமரித்துதானே வாழ்ந்தார்கள் ? பசு மாட்டு சாணத்தை தவிர்த்து எந்த ஒரு உரமும் நிலத்திற்கு தேவையே இல்லை. அதையும் தோட்டத்தில் கிடைக்கும் இலை தலைகளையும் கலந்து உரமாக தயாரித்தால் ஆண்டு கணக்கில் செலவே இல்லாமல் விவசாயம் செய்யலாம் ! ட்ராக்டரை காட்டி நம் மாட்டை பிடுங்கி கொண்டார்கள். அடி நாதமான உரமும் போச்சா ? இனி என்ன ? உரக் கம்பனிகளுக்கு லாபம்தான் ! விலையே இல்லாமல் மாட்டு சாணத்தை வைத்தே முப்போக விளைவித்த விவசாயி இன்று உர விலையை குறைக்க சொல்லி போராட்டம் நடத்துகிறான் ! முடியாவிட்டால் மருந்தை குடித்து சாகிறான் ! ட்ராக்டரும் விற்றாகிவிற்றது உரமும் விற்றாகிவிட்டது. விவசாயியின் கோவணத்தை கூட உருவாமல் விடபோவதில்லை என்கிற விடா முயற்சியுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் மத்திய அரசையும் அன்னதானம் போடுவதையே சாதனையாக சொல்லி கொள்ளும் மாநில அரசையும் வைத்து கொண்டு விவசாயம் செய்ய நினைப்பதுதான் குற்றம் !

பசுமாட்டை வைத்து எத்தனையோ பயன் எவ்வளவு பெரிய சுமையை வேண்டுமானாலும் சுமந்து மணி கணக்கில் நடக்கும். டீசலும் தேவையில்லை பெட்ரோலும்போட வேண்டாம் ! புல்லை தின்றுவிட்டு பாலை மட்டும உற்ற நண்பனாக விளங்கும் நுண் உயிர்களையும் சாணியால் பெருக்கவும் செய்யும் ! நீர் இறைக்க, நிலத்தை உழுக என பயன்களை அடிக்கி கொண்டே போகலாம் !
பசுக்களை அழிக்க இதற்கு மேலும் ஒரு மிக பெரிய சதி நடந்துள்ளது. இலையில் தாயாராகும் உணவு மூன்றாக பிரிக்கபட்டு ஒரு பங்கு செடியின் வளர்ச்சிக்கும் ஒரு பங்கு தானியதிர்க்கும் ஒரு பங்கு வேருக்கும் அதன் வளர்ச்சிக்கும் பயன்பட்டது. நம் விஞ்ஞானிகள் செய்த மாபெரும் துரோகம் செடியின் வளர்ச்சிக்கும் வேரின் வளர்சிக்கும் சென்று கொண்டிருந்த சக்தியில்
பெரும்பங்கை தானியத்திற்கு மட்டும் செல்லும் படி விதையின்மரபணுக்களை மாற்றி அமைத்தனர். என்ன தவறு ? தானியங்கள்அதிகமாகதானே கிடைக்கிறது ! ஏன் எதிர்க்கிறாய் என்று கேட்க வேண்டாம். . செடியின் வளர்ச்சி குறைந்ததால் மாட்டுக்கு கிடைக்க வேண்டிய உணவு அறவே இல்லாமல் போனது. பசு வளர்க்க விரும்பினாலும் அரசு பரிந்துரைக்கும் விதைகளை பயன்படுத்தினால் பசுவிற்கு "உணவில்லாமலேயே" விற்கும் நிலைதான் வரும் ! விளைவு ? உர முதலாளியும் ட்ராக்டர் முதலாளியும் லாபத்தில் திளைப்பர். .இதுவே 'பசுமை புரட்சி'யா நாட்டில் நடந்தது ! இந்த விதைகளை பயன் படுத்துவதில் மேலும் ஒரு கொடுமை என்னவென்றால் கம்பனிகள் தயாரிக்கும் மரபணு மாற்றப்பட்ட அனைத்து விதிகளுமே மலட்டு தன்மை ஒவ்வொரு முறையும் விதைக்க தேவையான மொத்த விதையையும் வெளிநாட்டு கம்பனிகளிடமிருந்தே  வாங்க வேண்டும் ! 

விதையை தயாரிப்பவனும் இயந்திரத்தை தயாரிப்பவனும் உரத்தை தயாரிப்பவனும் மேலும் மேலும் மக்கள் விரோத அரசாங்கத்தை பயன்படுத்தி கொள்ளை லாபம்  அடைய நம் விவசாயி காலம் போன கடைசியில் வானத்தை பார்த்து உக்கார்ந்துகொண்டு இருக்கார், பாவம் இப்படி ஒரு கூட்டு சதியை அவரால் எப்படி புரிந்து கொள்ள முடியும் ? இந்த முதலாளிகெல்லாம் அப்பன்ஒருத்தன் இருக்கான் .அவன்தான் பூச்சி மருந்து வியாபாரி ! ( பூச்சி கொல்லி மருந்தை ஆங்கிலத்தில்PESTICIDE என்று அழைப்பார்கள் இந்த வார்த்தை பிரயோகமே தவறு ! அது BIOCIDE என்றுதான் அழைக்க பட வேண்டும் ! ஆம் அதை உபயோகித்தால் PEST அல்ல BIO சிஸ்டமே அழிந்துதான் போகும் ) இவன் விக்கிற மருந்தை வாங்கி ஒரு முறை தெளித்தா போதும் புதிய புதிய பூச்சிகள் உருவாகி வந்துகொண்டே இருக்கும். .பூச் நல்லது செய்யும் பூச்சி கேட்டது செய்யும் பூச்சி என இரண்டு வகை உண்டு ! இரண்டும் சம அளவில் இருக்கும் பண்ணையில் எந்த பாதிப்பும் வராது. .மருந்தடிக்கிறேன் பேர் வழின்னு எல்லா பூச்சியையும் சேர்த்து கொள்கிற பொழுது மொத்த உயிர் சங்கிலியும் அழிந்துவிடும் ! ( BIO- CYCLE DAMAGE ) இயற்கையாகவே நடக்கும்விவசாயத்தில் பூச்சிகள் முக்கிய பங்குவகிக்கிறது ! அதை அழிக்கும் பொழுது மொத்த விவசாயத்தையும் குழி தோண்டி புதைப்பதாகவே பொருள்கொள்ள முடியும் ?! வண்டு இருந்தால் தானே மகரந்தச்சேர்க்க ை நடக்கும் ? மண் புழு இருந்தால் தானே உரம் கிடைக்கும் ? ஆக உரம்-பூச்சி கொல்லி மருந்து- மரபணு மாற்றப்பட்ட மலட்டு விதை- இயந்திரம் என்ற கூட்டு கொள்ளையில் விவசாயி இன்று கோவணத்துடன் காட்சி அளிக்கிறார் ! இதற்கெல்லாம் ஒரே தீர்வு விவசாயியின் உற்ற நண்பனான பசுவை மீட்டு எடுப்பதே ! பசுவை மீட்டெடுப்பதன் மூலம் நொடிந்து கிடக்கும் விவசாயத்தின் முதுகெலும்பை சரி செய்ய முடியும் ! பாரம்பரிய விதைகளை விதைப்பதும் இங்கு அவசியமாக கருதப்படுகிறது. முதலாளிகளின் கூட்டு சதியை நாம் பசுவை கொண்டும் விதைகளை கொண்டும் இயற்கை சூழலை கொண்டுமே வெற்றி முடியும் ! தீர்வு : ஜீரோ பட்ஜெட் - ஆன்ம வேளாண்மை என்னும் விவசாயத்தை கையில் எடுப்பதுதான் ! நடுவதும் அறுப்பதும் மட்டுமே விவசாயியின் வேலையாக இருக்க வேண்டும் ! மற்ற அனைத்தும் தாமாக நடக்கும் படியான சூழலை உருவாக்குவதே இந்த இயற்கை வேளாண்மையான ஜீரோ பட்ஜெட் வேளான்மையின் கொள்கையாகும் ! விவசாயத்தை மீட்டெடுக்க இதை தவிர வேறு வழி இல்லை ! உடனடியாக அனைத்து விவசாயிகளிடத்து ம் இதை பரப்புதல் வேண்டும் ! மக்களின் வாழ்வின் மீது அக்கறை கொண்ட அரசியல் இயக்கங்களும் படித்த இளைஞர்களும் இதை முனைப்பாக செய்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும் ! இல்லையேல் விவசாய சீரழிவு மட்டுமல்ல பெரும் உணவுப் பஞ்சமும் காத்திருக்கிறது என்பதை உணர்ந்து செயல் படுவோம் !


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media