BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 1 October 2014

கற்பனை அல்ல இது காரட்டின் அற்புதம்

 இலகுவில் எல்லோருக்கும் எந்த நாட்டிலும் கிடைப்பதும் மருத்துவத்திலும் மந்திரச்சாறு எனப் போற்றப்படும் காரட்டின் தாவரப் பெயர் “டக்கஸ் காரோட்டா” ஆகும். இதன் பிறப்பிடம் மத்திய ஆசியா ஆகும். ஆனாலும் இது தற்போது உலகெங்கும் கிடைக்கக்கூடிய ஒரு குளிர் காலப் பயிர் ஆகும். காரட்டில் அதிகளவு இருப்பது பீட்டா காரோட்டின் என்னும் மஞ்சள் நிறப்பொருள்தான். இதிலிருந்துதான் உடலுக்குத் தேவையானதும் மிகவும் முக்கியமானதுமான வைட்டமின் ‘ஏ’ உருவாகிறது. நமது ஈரல்தான் பீட்டா காரோட்டினை வைட்டமின் ‘ஏ’ ஆக மாற்றுகிறது. மீதமுள்ள பீட்டா கரோட்டின் ஈரலிலேயே பாதுகாக்கப்படுகிறது.

100 கிராம் காரட்டில் இருக்கும் சத்துக்கள் ஈரப்பதம் – 85% புரோட்டீன் – 0.9% கொழுப்பு – 0.2% தாது உப்புக்கள் – 1.2% நார்ச்சத்து – 2% காபோகைட்ரேட் – 10.6% கால்சியம் – 80 மி.கி. பொஸ்பரஸ் – 530 மி.கி. இரும்பு – 2.2 மி.கி. கரோட்டின் – 1890 மி.கி. தயமின் – 0.04 மி.கி. ரிப்போபிலோவின் – 0.02 மி.கி. நயாசின் – 0.06 மி.கி. வைட்டமின் சி – 3 மி.கி. கலோரி – 48 மி.கி.

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஒரு அற்புதமான காய்கறி காரட் ஆகும். இதைப் பச்சையாக தோலுடன் உண்பதே சாலச்சிறந்தது. ஏனெனில் இதன் தோலில் தான் அதிகளவு தாது உப்புகள் காணப்படுகின்றன. காரட் ஒரு சிறந்த நச்சு முறிப்பான் ஆகும். காரட்டில் காணப்படும் ஆல்காலின் பொருட்களினால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் அமில கார அளவை சமநிலைப்படுத்தும் தன்மையும் இதற்கு இருப்பதால் புற்றுநோயையும் இரத்த தமனிகளில் ஏற்படும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இதன் சாறு குழந்தைகள் முதல் முதியோர்வரை பயன்படுத்தக்கூடிய ஆரோக்கிய பானம் ஆகும். அதுமட்டுமல்ல இதனைப் பருகுவதால் கண்பார்வை மேம்படும். சளித்தொந்தரவுகள் குறையும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க காரட்டை பச்சையாக உண்ண நல்ல பலன் கிடைக்கும். காரட்டை பச்சையாகச் சாப்பிடும் போது அது உடலில் தீங்கிழைக்கும் கொழுப்பைக் குறைத்து உடலுக்கு நன்மை தரும் கொழுப்பை உருவாக்குகிறது. இது அமெரிக்க ஈஸ்டேர்ன் ரீஜனல் ரிசர்ச் சென்டர் மருத்துவ ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பிலிப் பிலிஃபர் மற்றும் டாக்டர் ஹேக் லாண்ட் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி காரட்டில் கொழுப்பைக் கரைக்கும் பெக்டின் இருப்பதால் தினமும் 2 காரட் சாப்பிடும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் கொழுப்பில் 10 முதல் 20 சதவிகிதம் குறைகிறது எனவும் இதனால் இரத்த அழுத்தம் சமநிலைக்கு வருகிறது எனவும் டாக்டர் வெப்பர் என்பவர் தனது ஆதாரபூர்வமான ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார்.

ஹார்வார்ட்டு மருத்துவ பல்கலைக் கழகத்தில் 8 வருடங்களாக 90,000 பெண்களை ஆராய்ந்ததில் தெரிய வந்த உண்மை இது. மாதத்தில் ஒருமுறை காரட் சாப்பிடுபவர்களிலும் பார்க்க வாரத்திற்கு ஐந்து முறை அல்லது அதற்கு மேலும் காராட் சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வரும் அபாயம் மூன்றில் இரண்டு விகிதம் குறைவாக கண்டறிந்தார்கள். காரட்டை பச்சையாக மென்று தின்னும் போது அது பால் ஈறுகளிலுள்ள கிருமிகளை கொல்வதுடன் பற்களுக்கிடையேயுள்ள உணவுத் துகள்களையும் வெளிக்கொணர்ந்து பற்கள் மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதை தவிர்த்துப் பாதுகாத்து நமது பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.

காரட் சாப்பிடும் போது அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பதால் உணவு விரைவில் செரிக்கப்படுகிறது.இதற்குக் காரணம் உணவு சமிபாடடையச் செய்யும் நொதியங்கள் தூண்டப்படுவதால் அஜீரணக் கோளாறு, கேஸ்டிரிக் அல்சர், குடல நோய்கள், அப்பண்டிக்ஸ் பெப்டிக் அல்சர் என்பவை வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் அட்ரீனலின் சுரப்பியின் பணியை ஊக்குவிப்பதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகிறது.Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media