BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 3 October 2014

5 நாட்களுக்குபின் ஜெயலலிதா பெற்ற தண்டனை குறித்து கருத்து தெரிவித்தார் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார், 5 நாட்களாக்கு பின் முதன்முறையாக இது குறித்து பேசியுள்ளார்.

கேள்வி :- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி தாங்கள் எதுவுமே கூறவில்லையே?

பதில் :- இந்தத் தீர்ப்பு பற்றி நான் கூறுவதை விட இந்த வார "ஆனந்த விகடன்" - "தீர்ப்பு தரும் பாடம்" என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில் சில பகுதிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.அது வருமாறு :-

"இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு! நீதி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது; நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில், "நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், சொத்துக்கள் பறிமுதல்"என்ற பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தின் தீர்ப்பு இந்திய அரசியல் வரலாற்றில் மிக மிக முக்கியமானது. நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிக்கப்பட்டுள்ள "முதல் முதலமைச்சர்" ஜெயலலிதா தான்! மாதம் ஒரு ரூபாய் வீதம் ஒருவர், 66 கோடி ரூபாய் எப்படிச் சம்பாதித்தார்? என்பதே ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் எளிய தர்க்கம். சாட்சிகள் மிகத் தெளிவாக உள்ள இதுபோன்ற வழக்கைக் கூட, ஒருவர் 17 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடியும் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. செயற்கையாக உண்டாக்கப்பட்ட இந்தக் கால தாமதம், "வினை விதைத்தவன் வினை அறுப்பான்"என்ற பழமொழிக்கு ஆகச் சிறந்த உதாரணம்!

சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்ததன் மூலம், ஜெயலலிதா தனக்கான அதிகபட்சத் தண்டனையை தானே வலியப் பெற்றிருக்கிறார். தீர்ப்பு வந்த நாளில், மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் தொற்றியது; பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன; கடைகள் இழுத்து மூடப்பட்டன. ஒரு நெருக்கடி நிலைக்கான பதற்றத்துடன் இருந்தது மாநிலம். இத்தகைய சூழல் ஏற்படும் என்பதைக் கணித்து, "கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு எந்தத் தொந்தரவும் அளிக்கக் கூடாது" என்ற அமைதிப்படுத்தும் அறிக்கை கூட ஜெயலலிதா தரப்பில் இருந்து வெளி வரவில்லை. காவல் துறையினரோ, ஆளும் கட்சி யினரின் வன்முறைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்".

தீர்ப்பு பற்றி நடுநிலை வார ஏடாம் "ஆனந்த விகடனில்"வெளிவந்த தலையங்கம்தான் இது!

"ஆனந்த விகடன்" மட்டுமல்ல; "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேட்டில் 2-10-2014 அன்று எழுதிய தலையங்கத்தில், "தண்டனை நியாயமற்றது என்று கருதினால், இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி மேல்முறையீடு செய்து கொள்வதற்கான வழிமுறைகள் நிரம்ப இருக் கின்றன. சட்டத்தின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்று கட்சியின் தொண்டர் களுக்கு, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வின் தலைமை முறையாக அறிவுறுத்த வேண்டும்" என்றும் விளக்கமாக எழுதியுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media